Emblem  
VOICE OF
ANANDJOTHI
 
Volume: No:002
Page 1
My path is towards God. Join me with faith. I shall take you with me.
-Dr.Nithiyanandam.
December
1996

Be linked to the one who dwells within.

You are fortunate in the sense that you don’t have to dive into the ocean to get the pearls and gems. The waves wash your feet and bring you the jewels also. You are very fortunate.

But , the success of the project or the plan lies in your ability to be consistently pure. However much we back you up, most of it depends on you. It is those who have taken up the torches in their hands who have to be more careful than those who live in darkness because one false move, one false step and you would have set a hut ablaze.

You fallow! You have to be very responsible. If you are not responsible, you cannot be responsive. You will know you are not responsive and you will blame the preceptor or the mother or yourself for it. But such state of affairs cannot be altered at all.

You must be permanently linked to the ‘most personal one’ who dwells in each one of you.

- Mother's message to members of AnandJothi -24th Oct.1983

DOCTOR IN HIS CLINIC

The clinic is our temple
and Doctor our God.
Whenever we are stuck,
he is there to push and prod.

We go to him with problems,
many worries and confusions.
His smile wipes them all
whether big or small.

An epitome of love and patience,
he speaks through his silence.
He helps us to reach the goal
and makes us feel whole

-Jamuna
Doctor Nithiyanandam in '90s

EDITORIAL

The divine grace and all your prayers have enabled blossoming of this second issue of the “Voice of Anandjothi”. Many of us were witness to the release of the inaugural issue on 10th Nov. 1996. By now the inaugural issue must have reached all members. This is just the beginning in our pursuit for the perfection of this magazine and hope the first issue invoked interest in line with our spiritual pursuits.

The prime purpose of this magazine, has pointed out at our inaugural gathering, will be to glorify our beloved Guru ‘Doctor’ and also enable communication between members. In this context we are introducing a topic ‘My spiritual experiences with Doctor’ from this issue , wherein members write in (English or Tamil are welcome) about their spiritual experiences with their Guru.


Emblem Volume:No:002
Page 2
In spiritual evolution, the irony is you end where you began and yet there has been a wonderful journey. December
1996

My Spiritual Experiences with Doctor

It was in October 1995. As usual, I meditated on Doctor for some time before going to sleep. That night I met Doctor in my dream and he took me to a beautiful marble temple on a sea shore. There I saw many Anandjothi members walking along with us. He took us all inside the temple complex and showed idols of Rama, Tathathreya, Ganesha, Devi Ma and many more. We all went into the main temple where we saw a majestic idol of ‘Shrdhi Sai Baba’ dressed in a beautiful, soft pink attire. Doctor asked us to sit and meditate there. Then I closed my eyes and concentrated, I could hear the swish of sea waves nearby. Then Doctor took us to a hall nearby and we had food there. He spoke to us for a long time. In the background I could hear the waves splashing on the beach. I asked Doctor as to where this temple was and he replied, “it is in Madras only”.

I woke up the next morning thinking that it was only a dream. But I kept recalling this dream again and again. Finally, I called up Shobana from Delhi and told her about this dream. She said that she did not know of any such temple in Madras but would try to find out. Two days later, Shobana called to tell that she had located this temple; and had visited it too. She also said that it was exactly as it had appeared in my dream.

Then I visited Madras, in June, 1996. I got the opportunity of visiting this Sai temple along with many other Anandjothi members. Unaffected by the cyclonic storm, we travelled in comfort to this temple. I was speechless with surprise and emotion when I saw my dream unfolding into reality. On entering the temple, I saw the loving form of Shrdi Sai Baba draped in a soft pink cloth. We meditated there for some time. Latter we all went to a nearby hall and had a delicious lunch. After lunch, we walked down to the sea and enjoyed the scenic beauty. The idols of the gods, our meditation, our lunch in the hall, the swish of the sea waves were all the same as I had seen in my dream.

-Jamuna

GROUP MEDITATION BY ANANDJOTHI MEMBERS

Quote from Holy Voice: “meditation is not a part time fantasy. It is not confined to the four walls, closed eyes, docility of breathing. Meditation is being aware within, without and throughout. Meditation is recitation. Recitation of regularity of breathing through the sacred path.”

We all know that it is prana that resides through the sacred path. We have read in the Holy Voice the prana remains in the ‘Domain’ (region above the throat and somewhere behind the nose) it is not a state of inaction but activity at its peak. When we are at this peak of activity we generate an enormous amount of positive charge in the atmosphere. This charge has the capability of destroying the negativity in the surrounding. We can direct this energy to help others also. Anybody can be helped without any discrimination.

In this context, Mother has chosen for us 10pm everyday as a time for group meditation.

Dear member, wherever you may be at 10pm, join for the group meditation every day. In addition we are starting a ‘request meditation’ from December to be done at the same time. Members can send their request for anybody (even non members) including themselves for request meditation to help alleviate their problems. Request are to be sent to Kesavan in Madras, who will convey the names/reason/dates for meditating to others as well as to enable include this information in that month’s issue of the magazine.

-Hari

REMEMBER TO JOIN THE GROUP MEDITATION
TIME 10pm
REQUEST MEDITATION 24TH DECEMBER 10pm FOR THE GOOD
HEALTH OF SANTHAMMA


 Emblem Volume::No:002
Page 3
அபிப்ராயங்கள் உன் தலைக்கு மேலிருக்கும் உத்ரம் போன்றவை.
சற்று தள்ளி இருந்தால்தான் நீ சுதந்திரமாக நடமாடலாம்.
December
1996

ஆனந்த ஜோதியின் அருள் பிரவாகத்தில் அருட்குறள்.

புண்ணிய தீர்த்தம் நித்யானந்தம்
சத்குரு டாக்டர் நித்யானந்தம்

புனித கங்கையும் புண்ணியம் பெருவாள் பொற்பதன் எங்கள் சத்குருநாதன் தவத்திருவடி தீண்டப்பெற்றால். அவன் ஆருயிர்க்கெல்லாம் அருந்தலைவன். எங்கள் நினைவெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நித்தியன். சத்தியம், தர்மம் போதிக்கும் புத்தனவன்.

கார்வண்ணன் அவன் கருணைக்கடலாம் எங்கள் மேய்ப்பன், மீட்பன் ஆவான். எங்கள் உள்ளம் கவர் கள்வன் கண்ணா, எங்கள் மன்னா என்றால் கதியாய் வந்து நொடியில் நிற்பான். அன்பு ஒன்றே அவனது வேதம். மறைக்கு எட்டா மாதவன். மானுடம் உய்ய வந்த மாமணி அவன். எங்கள் இதயம் நிறைந்த இறவன் அவன். என்றும் எங்கள் பரிசுத்தனின் பூங்கழல் போற்றி வணங்குகிறோம்.

ஆனந்த வள்ளல் தன்னையே மானுடத்துக்கு அற்பணித்த தனிப்பெரும் கருணை. அருளமுது படைக்கும் ஆனந்தத் தாய். அன்னை தனது அருள் பிரவாகத்தில் அக்டோபர் 6, 1996, ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு இதமான இனிய நேரத்தில் இமயத்தின் புனித கங்ககை தமது பிரவாகத்தின் சமவெளிப் பிரவேசம் தொடங்கும் ரிஷிகேஷத்தில் அன்பின் ஓர் அவதாரமாம் சுவாமி சிவானந்தரின் அரும் குடிலில் மானிடம் பரவெளிப் பிரவேசம் பெறுவதற்கு ‘அருட்குறள்’ என்னும் உள் ஒளி விளக்கை உலகுக்கு ஏற்றி வைத்தாள். அகிலத்தை அமைதி வழி நடத்திச் செல்ல வந்த ஆனந்த ஜோதியின் அருட்செல்வங்கள் இந்த குடிலில் குழுமியிருக்கிறார்கள்.

அன்பை ஈன்றெடுத்த அன்னை, சத்குருநாதர் டாக்டர் திரு உருவப் படங்கள் அன்பும் அருளும் பொங்கப் புன்னகை பூத்த வண்ணம் வாழ்த்த ஜமுனா அவர்கள் தியாகத் திருவுருவின் (டாக்டர்) இருமருங்கும் தீயாக தீபம் (மெழுகுவர்த்தி) ஏற்றி வைக்கிறார்கள். அண்ணல் தம் அருட் செல்வங்களின் சங்கமத்தையும், தம் லட்சியங்களில் ஒன்றான, இதுவரை வெளிவராத ‘வீடு பேரு’ பாக்கள் ‘அருட்குறளாய்’ தம்முன்னே மலர் தூவப்பட்டு, உலகுக்கு வழி காட்ட உதயமாகக் காத்திருப்பதையும் கண்டு களிப்புற்று நித்யானந்தமாய் காட்சி தருகிறார்.

விழாத் துவக்கத்தைக் குறிக்கும் வண்ணம் ஜமுனா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார்கள்.

அருட் செல்வர் ஸ்ரீஹரி அவர்கள், அண்ணலின் திருவுள்ளப்படி ‘நிகழ்ச்சி நிரல்’ உரையாற்றுகிறார்கள்.

முதலில் புனித அன்னை, சத்குருநாதர் டாக்டர் வழிபாடு. அடுத்து பஞ்சபூதங்களும், கங்கா மாதாவும் வணங்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து தியானம் பத்து நிமிடங்கள்.ஷோபனா அவர்கள் ‘அருட்குறள்’ பற்றி உரை நிகழ்த்துகிறார்கள்.

சத்குரு டாக்டர் நித்யானந்த வள்ளலின் ஆசிர்வாத மகிமையில் ஆனந்த ஜோதியின் ஃபளாரன்ஸ் சாந்தம்மா அவர்கள் அன்பு கரங்கள் தழுவ அருந்தவச் செல்வமாய் ‘அருட்குறள்’ உலகுக்கு உதயமானாள்.

அங்கு வருகை தந்த அனைவரும் அருட்குறள் நூல் பிரதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். நூல் வெளியீட்டிற்குப் பிறகு, அன்னை ஷோபனா அவர்கள் அருட்குறள் பாடல்களைப் படித்து அதற்கு விளக்கம் தறுகிறார்கள். விளக்கமும், விவரமும் நித்யானந்தமே பேரின்பம் என்பதை உணர்வதற்கே என்று அந்த இணையில்லா இனிமையின் குறிப்பாய் அனைவர்க்கும் இனிப்பு வழங்கப் படுகிறது.

ஆனந்த ஜோதியின் அருள் பிரவாகத்தில் உதித்த அருட்குறள் உலகம் உண்மையுள் உறைவதற்கு உள்ள உன்னத உரையாகும். உயிரின் ஆதாரம் தேடுவோர்க்கு, அரிய ஆதாரமாகும். நல் ஆகாரமாகும். ஆனந்த வள்ளலின் அருட்குறள் அகிலத்தை அன்பில் நிலைக்கச் செய்யும் உயிர் மூச்சாகும். ஆன்ம ஒளி காண விழையும் அறவோர்க்கு அருள் ஊற்றாகும். சம்சார சாகரத்தில் இருந்து கரை சேர்க்கும் நித்யானந்த நிலையத்தின் கலங்கரை விளக்கமாகும்.
Doctor Nithiyanandam in '80s
ஸ்ரீஹரி அவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரல் விளக்க உரையின் போது “பஞ்ச பூதங்கள் சேர்கின்ற போது the message gets carried” என்று குறிப்பிட்டார்கள். இறைவனின் இனிய லீலையில் பஞ்ச பூதங்களின் மிக நுட்பமான சேர்க்கை மானிட சரீரங்கள். அவை ப்ரம்மத்தின் மறை செய்திகள் தாங்கிச் செல்லும் ஞான ஊர்திகள்.

ஆனந்த ஜோதியின் அருட்செல்வங்கள் அமைதியின் ஞான ஊர்திகள். அவர்கள் அருட்குறளின் சாரத்தை தங்கள் கதியில் இருத்திவிட்டார்கள். அகிலத்தை அமைதி வழி நடத்திச் செல்ல ஒரு முனைப்பில் த்யானத்தில் அமர்ந்துவிட்டார்கள். உண்மையாம் நித்யானந்தத்தில் ஒன்றாய் கலந்துவிட்டார்கள்

சர்வமும் சத்குரு நித்யானந்தம், எங்கும் நிஜமாக நிறைந்துள்ளார்.

ஹே நித்யானந்த பிரபு!
நின் கதியே எங்கள் கதி!
நின்னை அடைவதே எங்கள் விதி!
சரணம், நின் திருவடியே சரணம்!

-திருமாறன்.
டாக்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம். 1997ம் ஆண்டு ஜனவரி திங்கள் ஆறாம் நாள் நாம் அனைவரும் மாலை மூன்று மணியளவில் பட்டினத்தார் கோவிலில் குழுமி நமக்குத் தாயாகவும், தந்தையாகவும், அருள்மிகு ஆசானாகவும் விளங்கும் சத்குருவின் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம் என்பதை மேடம் ஷோபனா அவர்கள் அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வர விரும்புகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் பாக்கியத்தை அனைவரும் பெற வேண்டும் என விரும்புகிறார்கள்.
திருமதி கிரிஜா அவர்கள் இல்லத்தில் டிசம்பர் மாத சத்சங்கம் ஞாயிறன்று இனிதே நடந்தேறியது


Emblem Volume:No:002
Page 4
ஒரு சீடனுக்கு ஒரு குழந்தையின் இதயமும், ஒரு துறவியின் ஞானமும்,
ஒரு வீரனின் ஆவேசமும் இருக்க வேண்டும்.
December
1996

ரிஷிகேஷ் யாத்திரை

ஆனந்த ஜோதியின் நண்பர்கள் ஒன்றாம் தேதி இரவு தமிழ்நாடு எஃஸ்பிரஸில் கிளம்பி 3ம் தேதி காலை டில்லி சேர்ந்தோம். ஹரி மற்றும் ஜமுனாவின் ஏற்பாட்டில் ராம் மந்திர் என்ற இடத்தில் தங்கி அவர்கள் அன்பிலும் உபசரிப்பிலும் திளைத்து அன்று இறவு ரிஷிகேஷ் பயணமானோம்.

ஹரிதுவாரிலிருந்து பட்பட்டி என்னும் வாகனத்தில் ரிஷிகேஷ் செல்லும்போது எங்களுக்கு முன் தினம் அந்த பாதையை 150 மைல் வேகத்தில் கடந்து சென்ற புயலின், மழையின் சீற்றத்தை சாலை யெங்கும் காணமுடிந்தது.

குதுகலத்துடன் ஓடும் கங்கையையும், பச்சையுடை அணிந்த மலைகளையும் காண்பது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. சிவானந்த ஆசிரமத்தில் ஜமுனாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசாலமான அறைகளைக்கொண்ட குடிலில் தங்கினோம். அந்த இடத்தின் அழகும், அமைதியும் எங்களுள்ளும் பிரதிபலித்தது. உணவும் ஆசிரமத்திலேயே உட்கொண்டோம்.

தினமும் காலை 5 மணிக்கு எழுந்து தியானம் செய்துவிட்டு, காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கங்கைக் கரைக்கு சென்று நீராடினோம். அத்தனை குளிரிலும் கங்கையில் நீராடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அந்த அதிகாலையும், குளிர்ந்த, பொங்கியோடும் கங்கையும், அமைதியான மலையடிவாரமும், ஆஹா! ஓ ஹோ!! இன்பமயம். மாலை அன்னையுடன் பேசியபோது, மரு நாள் 6ம் தேதி காலை ஒன்பது மணிக்கு அருட்குறள் புத்தகம் வெளியிட வேண்டும் என்றார்கள்.

மாலையில் ஹரி, ஜமுனா மற்றும் பலரும் வெளியில் சென்று திரும்பும்போது, ஒரு பெரியவர் ஹரியிடம் ஒரு 25 பைசா கேட்டு பெற்றுக்கொண்டு, சம்மந்தமில்லாமல் 9 மணி மிக முக்கியம் என்று சென்னையிலிருந்து வந்த ஒரு கும்பலுடன் தனக்கு வேலையிருப்பதாகவும், இப்போது தான் கங்கைத்தாயுடன் பேசமுடியும்; ஒய்வாக இருப்பாள் என்று சொல்லி நதியின் கரை பக்கம் சென்று விட்டாராம்.

மறு நாள் காலை புத்தக வெளியீடு நடந்தேறியது. விவரம் வேரிடத்தில் தனியாக வந்துள்ளது. அன்று மாலை புறப்பட்டு, ஹரிதுவார் வந்து ஐயப்பன் கோவிலில் தங்கினோம். அன்று மானசா தேவி கோவிலுக்கு சென்றோம்.

மறு நாள் மற்ற கோவில்களைப் பார்த்துவிட்டு, மஹரவாகினி கோவிலில் மணிக்கு பழக்கமானவர்கள் இருந்ததால், அங்கே மதிய உணவு முடிந்தது. அன்று இரவு கிளம்பி, டில்லி வழியாக, 10ம் தேதி காலை சென்னை வந்தடைந்தோம்.

மிகக் குறைந்த செலவில் ஹரிதுவார், ரிஷிகேஷ் சென்று வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அதற்கு காரணம் டாக்டரும், மதரும் என்பதில் சந்தேகமில்லை.

-அனந்தசுப்ரமணியம்.


வாய்ஸ் ஆஃப் ஆனந்த ஜோதி வெளியீட்டு விழா.

1996ம் ஆண்டு, அக்டோபர் திங்கள், தீபாவளித் திருனாளன்று, மாலை 6 மணியளவில், சென்னை உள்ளகரத்தில் வசிக்கும் என் இல்லத்தில் "வாய்ஸ் ஆஃப் ஆனந்த்ஜோதி" யின் முதல் இதழ் மலர்ந்தது. இதன் பின்னணி மிக சுவாரஸ்யமானது.

சுமார் 6 மாதம் முன்பு அன்னை செஷனில் வந்த போது ஒரு புத்தகம் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதை ஹரி மறந்துவிட்டதாகவும், பின்பு ஒரு மாதம் முன்பு மஹேஷும் ஜமுனாவும், பேசிக்கொண்டிருந்த போது, ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கவேண்டிய அவசியத்தையும், அது அமைய வேண்டிய விதத்தையும் பற்றி தீர்மானித்ததாக ஹரி அவர்கள் வெளியீட்டு விழாவில் கூறினார்.

10ம் தேதி வரவேண்டும் என்று அன்னை கூறிவிட்டதால், விஷயங்களை சேகரித்து வைத்துக்கொண்டு, 9ம் தேதியன்று ஹரி, மாலினி, பேட்ஸ் மூவரும் கணினி முன் உட்கார்ந்து ஆரம்பித்தவுடன், ஒவ்வொறு செய்தியும் எங்கே எப்படி வரவேண்டுமோ அங்கே அப்படி அழகாக அமைந்து வேலை சுலபமாக முடிந்துவிட்டதென்று ஹரி சொன்னார்.

சுமார் ஐந்து மணி அளவில் அனைவரும் அமர்ந்திருந்தோம். பூவால் அலங்கரிக்கப்பட்ட படத்தில், பளிச்சென்று டாக்டர் சிரித்துக்கொண்டிருந்தார். வெள்ளைத்துணினால் சுற்றப்பட்டு பூக்கள் தூவப்பட்டிருந்த புத்தகக் கட்டு அவர்முன் இருந்தது. குத்துவிளக்குகளின் தீப ஒளியில் அந்த இடத்தில் தெய்வீகக் களை பரவியது. விண்ணவர் சூழ்ந்திருக்கும் இடம் வேறு எப்படி இருக்க முடியும்!

மாலினி 'அன்பே அமுதம், அன்பின் மறு பெயர் அம்மா' பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஹரி இந்த பத்திரிக்கையின் பின்னணியைப் பற்றி சிறு உரை யாற்றிய பிறகு திருமதி சாந்தம்மா அவர்களால் 'வாய்ஸ் ஆப் ஆனந்த் ஜோதி' வெளியிடப் பட்டு அனைவருக்கும் வினியோகிக்கப் பட்டது. பிறகு சிற்றுண்டி அருந்தி அனைவரும் கலைந்து சென்றனர்.

அந்த பிரதியை கையில் ஏந்தியிருந்த போது, ஒரே ஒரு எண்ணம் தான் மனதில் ஓடியது. இன்று உலகம் முழுவதும் பரவி கோடானுகோடி மக்களை தம் பால் ஈர்த்திருக்கும் கிருத்துவத்தின் ஆரம்பம், நாசரத் என்னும் இடத்தில் ஆரவாரமின்றி அமைதியாக நிகழ்ந்ததாம்.

எவ்வளவு பெரிய விஷயமாயினும் ஆரம்பம் மிகச்சிரியதாகத்தான் இருக்கிறது பாரதியின் பாடலைப்போல. "அக்னி குஞ்சொன்றைக் கண்டு, அதை காட்டிடை பொந்தினில் வைத்தேன், வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என கேட்டான் பாரதி. இன்று நான்கு பக்க பத்திரிக்கையாக வெளியாகியுள்ள இந்த ஆன்மிகக் குஞ்சின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் பார்க்கிரேன்.

திக்கெட்டும் பரவி திசைகளெல்லாம் ஒளி பரப்பட்டும். வாழ்க டாக்டர் நாமம்! வளர்க அவர்தம் புகழ்!

-கேசவன்

புதிய அங்கத்தினர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்

திரு ஸ்ரீராம், திரு சபேசன், திரு சிவராமன், திருமதி மாலதி கோபாலன் ஆகிய நால்வரும் நவம்பர் மாதம் 24ம் நாள் காலையில் நம் சத்குருவின் சீடர்கள் வரிசையில் சேர்ந்துள்ளனர். அண்ணலின் அன்பு பிரவாகத்தில் வித விதமான வண்ணங்களுடனும் மணத்துடனும், மிதந்து கொண்டிருக்கும் மலர்களின் கூட்டத்தில் புதிதாய் இணைந்த இம் மலர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

-ஆனந்தஜோதி
NEXT SATSANGH

Date: 05-01-1997
Time: 5 pm
Mr R Lakshmi Narasimhan,
Plot 3, Jagannathan Street,
Via Kamarajar Salai,
Rajaji nagar, villivakkam,
Madras-49
Near Railway station